உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மத்திய அரசின் ஒரு நிலையம் ஒரு பொருள் திட்டம் முடக்கம்; ராமநாதபுரம் ரயில் நிலைய  கருவாடு கடைக்கு பூட்டு

மத்திய அரசின் ஒரு நிலையம் ஒரு பொருள் திட்டம் முடக்கம்; ராமநாதபுரம் ரயில் நிலைய  கருவாடு கடைக்கு பூட்டு

ராமநாதபுரம் : ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் மத்திய அரசின் ஒரு நிலையம், ஒரு பொருள் திட்டத்தில் பயணிகளின் வசதிக்காக துவக்கப்பட்ட கருவாடு விற்பனை மையம் செயல்படாமல் பூட்டிக் கிடக்கிறது. அந்தந்த பகுதி ஊர்களில் பிரபலமான உற்பத்தி பொருள்கள், விளைபொருட்களை ரயில் நிலையங்களில் சந்தைப்படுத்தும் வகையில் அந்தந்த ஊர் ரயில் நிலையங்களில் விற்பனை செய்ய மத்திய அரசு சார்பில் ஒரு நிலையம், ஒரு பொருள் திட்டத்தை செயல்படுத்தப்பட்டது. இதன்படி 2022ல் ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி ரயில் நிலையத்தில் மிளகாய் விற்பனை மையம், ராமேஸ்வரத்தில் கடலில் கிடைக்கும் பாசி, சங்கு போன்றவற்றில் தயாரிக்கப்படும் பொருட்கள் விற்பனை மையம், மாவட்ட தலைநகரமான ராமநாதபுரத்தில் கருவாடு விற்கப்பட்டது. இதன் மூலம் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளியூர்களிலிருந்து வரும் பயணிகள் அந்ததந்த ஊரின் முக்கிய பொருட்களை வாங்கிச் சென்றனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் ஒருநிலையம், ஒரு பொருள் திட்டத்தின் கீழ் துவங்கிய கருவாடு கடை செயல்படாமல் பூட்டிக் கிடக்கிறது. உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் பயணிகளும் பயன்பெறும் வகையில் மீண்டும் கருவாடு கடையை பயன்பாட்டிற்கு கொண்டுவர ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.--------


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை