உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஆடிப்பெருக்கு சுமங்கலி பூஜை ஏராளமானோர் பங்கேற்றனர்

ஆடிப்பெருக்கு சுமங்கலி பூஜை ஏராளமானோர் பங்கேற்றனர்

கடலாடி: ஆடிப்பெருக்கை முன்னிட்டு கடலாடியில் சுமங்கலி பூஜை நடந்தது. கடலாடி தேவர் மகாசபைக்கு பாத்தியப்பட்ட ராஜராஜேஸ்வரி அம்மன் கோயிலில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு சுமங்கலி பூஜை நடந்தது. மூலவர் ராஜராஜேஸ்வரி அம்மனுக்கு 16 வகையான அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. கோயில் வளாகத்தில் 508 பெண்கள் பங்கேற்ற சுமங்கலி பூஜை நடந்தது. சகஸ்ரநாம அர்ச்சனை, குங்குமம், மஞ்சள் அர்ச்சனை, காயத்ரி மந்திரம், பஜனை, நாமாவளி உள்ளிட்டவைகளை பாடினர். பூஜையில் பங்கேற்ற பெண்களுக்கு தாம்பூல பிரசாதம் வழங்கப்பட்டது. அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை