அழகன்குளம் பகுதியில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும்: திருவாடானை எம்.எல்.ஏ
ராமநாதபுரம்: அழகன்குளம் பகுதியில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என திருவாடானை எம்.எல்.ஏ., கருமாணிக்கம் அரசிடம் வலியுறுத்தப் போவதாக தெரிவித்தார்.ராமநாதபுரம் அருகே அழகன்குளத்தில் அகழாய்வு கண்ணோட்டம் குறித்த புத்தகம் வெளியீட்டு விழா, கருத்தரங்கம் நடந்தது.அழகன்குளம் முஸ்லிம் ஜமாத் தலைவர் அன்வர்சலாம், ஹிந்து சமூக தலைவர் பாஸ்கரன் தலைமை வகித்தனர். அழகன்குளம் முன்னாள் ஊராட்சித்தலைவர் வழக்கறிஞர் அசோகன் அழகன்குளம் அகழாய்வில் 1986 முதல் நடந்த விபரங்களை தொகுத்து ஒரு புத்தகமாக உருவாக்கியிருந்தார். அதன் வெளியீட்டு விழா நடந்தது. ராமநாதபுரம் தொல்லியல் நிறுவனத்தின் தலைவர் ராஜகுரு வெளியிட திருவாடானை எம்.எல்.ஏ., கரு.மாணிக்கம் பெற்றுக்கொண்டார். அழகன்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மகேந்திரன்---- உட்பட பலர் பேசினர்.அழகன்குளம் பகுதியில் அருங்காட்சியகம் அமைக்க தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் அழகன்குளம் அகழாய்வு புத்தக்ததொகுப்பு வெளியிடும் நிகழ்ச்சியில் பங்கேற்ற திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ., கரு மாணிக்கம் அழகன்குளம் பகுதியில் அருங்காட்சியகத்திற்காக அரசு தேர்வு செய்யப்பட்ட இடம் உள்ளது.அப்பகுதியிலேயே அருங்காட்சியகம் அமைக்கப்பட வேண்டும், என தமிழக முதல்வர், தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசிடம் வலியுறுத்துவேன் என தெரிவித்தார்.