| ADDED : ஜன 27, 2024 06:52 AM
ராமநாதபுரம் : -ராமநாதபுரத்தில் ஐக்கிய விவசாயிகள் சங்கத்தின் கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் சார்பில் டிராக்டர், டூவீலர் ஊர்வலம், மற்றும் ஆர்ப்பாட்டம் நடந்தது.எஸ்.கே.எம்., மாவட்ட கன்வீனர் மயில்வாகனன் தலைமை வகித்தார். சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் சிவாஜி, ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட செயலாளர் ராஜன், விவசாய சங்க மாவட்டத்தலைவர் முத்துராமு, முன்னிலை வகித்தனர். டில்லியில் ஓராண்டு காலம் போராடிய விவசாயிகள் போராட்டத்தினை முடிவுக்கு கொண்டு வர மோடி அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். தொழிற்சங்கங்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்யக்கூடாது. மோட்டார் வாகன சட்டத்தினை கைவிட வேண்டும், என வலியுறுத்தி இடையர்வலசையில் துவங்கி ராமநாதபுரம் அரண்மனைப்பகுதியில் முடிந்தது. பின் நடந்த ஆர்ப்பாட்டத்தில் சி.ஐ.டி.யு., மாவட்டத்தலைவர் சந்தானம், மாவட்ட நிர்வாகிகள் அய்யாதுரை, பாஸ்கரன், வாசுதேவன், காசிநாதன், ஏ.ஐ.டி.யு.சி., லோகநாதன், விவசாயிகள் சங்கம் மாவட்ட பொருளாளர் கல்யாணசுந்தரம், ஆட்டோ, மின்சாரம், சுமை, கட்டுமானம் ஆகிய தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.----