மேலும் செய்திகள்
3 ஊராட்சிகளில் கம்யூட்டர் திருட்டு
10 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்,
10 hour(s) ago
கமுதியில் நாய் கூட்டம் அச்சத்தில் பொதுமக்கள்
10 hour(s) ago
10 நாட்களுக்கு பின் இன்று மீன்பிடிப்பு
10 hour(s) ago
திருப்புல்லாணி : ரேஷன் கடை கட்டடம் இல்லாததால் கலையரங்க கட்டடம் மற்றும் நுாலகத்தில் ரேஷன் கடை செயல்படுகிறது.களிமண்குண்டு ஊராட்சி குத்துக்கல்வலசையில் 350 க்கும் அதிகமான ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். இங்கு ரேஷன் கடைக்காக தனியாக கட்டடம் இல்லாததால் 2014ல் கட்டப்பட்ட கலையரங்க கட்டடடத்தில் தற்போது வரை ரேஷன் கடை செயல்படுகிறது.அரிசி, சீனி, பருப்பு மூடைகள் சமுதாயக்கூடத்தின் பக்கவாட்டு பகுதிகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. மழைக் காலங்களில் தார் பாய் வைத்து மூடி பராமரிக்கப்படுகிறது. குத்துக்கல்வலசையை சேர்ந்த தங்கராஜ் கூறியதாவது:ரேஷன் கடை கட்டடம் இல்லாததால் கலையரங்க கட்டடத்தின் வளாகத்தில் ரேஷன் அரிசி உள்ளிட்ட உணவு பொருட்கள் வைக்கப்பட்டுள்ளது. அருகில் கிராமப்புற நுாலகத்தில் ரேஷன் கடை அலுவலகம்செயல்படுகிறது. இது குறித்து மக்கள் குறைதீர்க்கும் நாளில் மனு அளித்துள்ளோம்.எனவே குத்துக்கல்வலசைக்கு புதிய ரேஷன் கடை கட்ட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
10 hour(s) ago
10 hour(s) ago
10 hour(s) ago
10 hour(s) ago