வலையில் சிக்கிய ஆமை கடலில் விடப்பட்டது
தொண்டி : தொண்டி கடலில் மீனவர்களின் வலையில் சிக்கிய ஆமை உயிருடன் மீட்கப்பட்டு கடலில் விடப்பட்டது. தொண்டியை சேர்ந்த பாலமுருகன் என்பவருக்கு சொந்தமான நாட்டுப்படகில் காளி, சதீஷ், கணேசன், கவின், பூமிநாதன், விஜய் சீனிகுட்டி ஆகியோர் நேற்று முன்தினம் இரவு மீன்பிடிக்கச் சென்றனர். நீண்ட துாரம் சென்று மீன்பிடித்துக் கொண்டிருந்த போது பத்து கிலோ எடையுள்ள அரிய வகை கடல் ஆமை சிக்கியது. ஆமையை வலையில் இருந்து எடுத்து உயிருடன் கடலில் விட்டனர். மீனவர்கள் கூறுகையில், தற்போது இனப்பெருக்க காலம் என்பதால் ஆமைகள் அடிக்கடி கடற்கரை பகுதிக்கு வருவது வழக்கம். வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் படி ஆமையை பிடிக்க கூடாது என்பதால் உயிருடன் மீட்டு கடலில் விட்டோம் என்றனர்.