உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / அயோத்தி சென்றது வாழ்நாள் புண்ணியம் ஆர்.எஸ்.எஸ்., தலைவர் கருத்து

அயோத்தி சென்றது வாழ்நாள் புண்ணியம் ஆர்.எஸ்.எஸ்., தலைவர் கருத்து

ராமநாதபுரம்:அயோத்தியில் நடந்த ராமர் கோயில் பிராண பிரதிஷ்டை விழாவில் தமிழகத்தில் இருந்து பங்கேற்ற ஆர்.எஸ்.எஸ்., மாநிலத்தலைவர் ஆடலரசு, அவரது மனைவி லலிதா பங்கஜவல்லி ராமநாதபுரம் திரும்பினர். ஆடலரசு கூறியதாவது: ராமர் வாழ்ந்த மண்ணான ராமநாதபுரத்தில் இருந்து பிரதிநிதியாக எங்களை அழைத்திருந்தனர். இது எங்களுக்கு இந்த ஆண்டில் இரண்டாவது தீபாவளி. ஆர்.எஸ்.எஸ்., தேசிய தலைவர் மோகன் பாகவத், பிரதமர் மோடி, முதல்வர் யோகி ஆதித்யநாத், கவர்னர் ஆனந்தி பென்படேல் போன்ற முக்கியஸ்தர்கள் பங்கேற்ற இடத்தில் நாங்களும் பங்கேற்க அந்த ராமர் வாய்ப்பு வழங்கியதாகவே கருதுகிறோம்.ராமருக்கு முதல் ஆரத்தி எடுத்தது எங்கள் வாழ்நாள் புண்ணியம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை