மேலும் செய்திகள்
3 ஊராட்சிகளில் கம்யூட்டர் திருட்டு
17 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்,
17 hour(s) ago
கமுதியில் நாய் கூட்டம் அச்சத்தில் பொதுமக்கள்
17 hour(s) ago
10 நாட்களுக்கு பின் இன்று மீன்பிடிப்பு
17 hour(s) ago
திருவாடானை; நம்புதாளை அரசு உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் இல்லாததால் கற்பித்தல் பணியில் தொய்வால் மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்பட்டுள்ளது.தொண்டி அருகே நம்புதாளையில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. 496 மாணவர்கள் படிக்கின்றனர். இப்பள்ளியில் தலைமை ஆசிரியர் பணியிடம் ஓராண்டாக காலியாக உள்ளது. அங்கு பணியாற்றும் மற்றொரு ஆசிரியர் கூடுதல் பொறுப்பேற்றுள்ளார். தலைமை ஆசிரியர் இல்லாததால் மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்பட்டுள்ளது. பள்ளி மேலாண்மை குழு தலைவர் கண்ணன் கூறியதாவது: பெற்றோர் ஆசிரியர் கழக ஒத்துழைப்போடு சிறப்பு வகுப்பு நடத்துதல், ஆசிரியர்களை ஊக்குவித்தல் ஆகிய பணிகள் தலைமை ஆசிரியர் இல்லாததால் முடங்கி கிடக்கிறது. மேலும் பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்ற முடியவில்லை. கலெக்டர் மற்றும் முதன்மைக் கல்வி அலுவரிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. தலைமை ஆசிரியர் பணியிடத்தை விரைவில் நிரப்ப அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
17 hour(s) ago
17 hour(s) ago
17 hour(s) ago
17 hour(s) ago