உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / அப்துல்கலாம் வீடு சாலையில் பள்ளத்தால் விபத்து அபாயம்

அப்துல்கலாம் வீடு சாலையில் பள்ளத்தால் விபத்து அபாயம்

ராமேஸ்வரம் : -ராமேஸ்வரத்தில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் வீடுக்கு செல்லும் சாலையில் பெரிய பள்ளம் உள்ளதால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் வீடு ராமேஸ்வரம் முஸ்லீம் தெருவில் உள்ளது. இவரது வீட்டையும், அங்குள்ள கண்காட்சியகத்தை காண தினமும் ஏராளமான வாகனத்தில் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இதனால் கலாம் வீடுக்கு செல்லும் சாலை வாகன போக்குவரத்துடன் அதிகரித்துள்ளது. மேலும் இத்தெருவில் வசிக்கும் மக்கள், கலாம் வீட்டுக்கு செல்லும் சாலை தான் பிரதான வழியாக உள்ளது. ஆனால் இந்த சாலை நுழைவில் வாறுகாலுக்கு தோண்டிய பெரிய பள்ளம் மூடாமல் அப்படியே கிடக்கிறது. இதனால் டூவீலர், நடந்து செல்லுபவர்கள், சுற்றுலா பயணிகளின் வாகனங்கள், மழலையர் பள்ளிக்கூடம் உள்ளதால் குழந்தைகள் விபத்தில் சிக்க வாய்ப்புள்ளது. எனவே சேதமடைந்துள்ள சாலையை சரி செய்ய கலெக்டர் சிம்ரன்ஜித் சிங் காலோன் உத்தரவிட வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை