உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / நடிகர் விஜயகாந்த் நினைவு மவுன அஞ்சலி ஊர்வலம்

நடிகர் விஜயகாந்த் நினைவு மவுன அஞ்சலி ஊர்வலம்

ராமநாதபுரம்: மறைந்த தே.மு.தி.க., தலைவர் நடிகர் விஜயகாந்துக்கு மவுன அஞ்சலி ஊர்வலம், இரங்கல் கூட்டம் ராமநாதபுரத்தில் நடந்தது.ராமநாதபுரம் அண்ணா சிலை அருகில் இருந்து துவங்கியஊர்வலத்தில் தே.மு.தி.க., மாவட்ட செயலாளர் சிங்கை ஜின்னா, நகர் செயலாளர் ராம்கி, பா.ஜ., மாவட்டத்தலைவர் தரணி முருகேசன், மாநில பொதுச்செயலாளர் பொன் பாலகணபதி, ராமநாதபுரம் தி.மு.க., நகராட்சித்தலைவர் கார்மேகம், காங்., மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் செல்லதுரை அப்துல்லா, ம.தி.மு.க., மீனவரணி செயலாளர் பேட்ரிக் உட்பட பல்வேறு கட்சியினர் ஊர்வலத்தில் பங்கேற்றனர். மவுன அஞ்சலி ஊர்வலம் நகரின் முக்கிய பகுதிகளின் வழியாக சென்று அரண்மனை பகுதியில் நிறைவடைந்தது. அங்கு இரங்கல் கூட்டம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை