மேலும் செய்திகள்
தமிழ் ஆட்சிமொழி சட்ட வார விழிப்புணர்வு பேரணி
19-Dec-2025
ராமநாதபுரம்: ராமநாதபுரம் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் தமிழ் மொழி சட்டம் இயற்றப்பட்ட நாளை நினைவுகூறும் வகையில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆட்சிமொழிச் சட்ட வாரம் டிச.,17 முதல் 24 வரையிலான ஒரு வார காலத்திற்கு கொண்டாடப்படுகிறது. இதில், ஆட்சிமொழிச்சட்டம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கலெக்டர் அலுவலக வளாகத்திலுள்ள தனியார் கல்வியியல் கல்லுாரியில் இருந்து கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் விழிப்புணர்வு ஊர்வலத்தை துவக்கி வைத்தார். 'டி' பிளாக் வரை ஊர்வலம் சென்றடைந்தது. தமிழ்வளர்ச்சி உதவி இயக்குநர் சபீர்பானு, தமிழறிஞர்கள், தமிழ் அமைப்புகளை சேர்ந்தவர்கள், மாவட்ட ஜவகர் சிறுவர் மன்ற மாணவர்கள், கலை பண்பாட்டுத் துறை பகுதி நேர நாட்டுப்புற கலை பயிற்சி மாணவர்கள், ஒருங்கிணைப்பாளர் லோகசுப்புரமணியம் பங்கேற்றனர்.
19-Dec-2025