உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / திருவெற்றியூர் வரை கூடுதல் பஸ் தேவை

திருவெற்றியூர் வரை கூடுதல் பஸ் தேவை

தொண்டி : தொண்டியிலிருந்து திருவெற்றியூருக்கு கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.திருவாடானை அருகே திருவெற்றியூரில் பாகம்பிரியாள் கோயில் உள்ளது. வெள்ளி, செவ்வாய் மற்றும் திருவிழா காலங்களில் பல ஆயிரம் பக்தர்கள் கூடுவார்கள். சிவகங்கை, புதுக்கோட்டை போன்ற வெளி மாவட்டங்களிலிருந்து பக்தர்கள் பாதையாத்திரையாக செல்வார்கள். தொண்டியிலிருந்து திருவெற்றியூருக்கு பஸ் வசதியில்லாததால் பக்தர்கள் அவதியடைகின்றனர்.திருவெற்றியூர் மக்கள் கூறுகையில், தொண்டியில் இருந்து காலை 7:00 மணிக்கு மட்டும் திருவெற்றியூருக்கு அரசு பஸ் செல்கிறது. மற்ற நேரங்களில் பஸ் வசதியில்லை. திருவாடானைக்கு சென்று அங்கிருந்து திருவெற்றியூருக்கு செல்ல வேண்டும். பட்டுகோட்டை உள்ளிட்ட நீண்ட துாரங்களில் இருந்து வரும் பக்தர்கள் மிகவும் சிரமம் அடைந்துள்ளனர். எனவே தொண்டியில் இருந்து திருவெற்றியூருக்கு கூடுதல் பஸ் இயக்க அரசு போக்குவரத்து அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை