உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / நகராட்சி பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள்

நகராட்சி பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள்

ராமநாதபுரம்; ராமநாதபுரத்தில் வள்ளல்பாரி நகராட்சி நடுநிலைப்பள்ளி மற்றும் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ரூ.1 கோடியே 55 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்ட 11 கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் திறப்பு விழா நடந்தது. கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்து கூடுதல் வகுப்பறை கட்டடங்களை திறந்து வைத்தார். முன்னதாக பள்ளியில் முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு கலெக்டரை மாணவர்கள் காமராஜர் மாறு வேடமிட்டு மலர் கொடுத்து வரவேற்றனர். மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கினர். நகராட்சி தலைவர் கார்மேகம், கமிஷனர் அஜிதாபர்வின், ராமநாதபுரம் வட்டார கல்வி அலுவலர் சூசை, பள்ளி தலைமை யாசிரியர் ரெங்கநாயகி, தி.மு.க., முக்கிய பிரமுகர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி