உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / விவசாய தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

விவசாய தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

ஆர்.எஸ்.மங்கலம் : விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்.எஸ்.மங்கலத்தில் விவசாய தொழிலாளர் சங்க மாவட்டத் துணைத் தலைவர் சந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் குருசாமி முன்னிலை வகித்தார். கடந்த 13 ஆண்டுகளாக போராடி வரும் விதவைகள் மற்றும் ஏழைப் பெண்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும். ரேஷன் கடைகளில் பொது மக்களுக்கு வழங்க வேண்டிய அத்தியாவசிய பொருட்களான அரிசி, பாமாயில் உள்ளிட்டவைகளை ஊழியர்கள் வெளி மார்க்கெட்டில் மொத்தமாக விற்பனை செய்வது அதிகரித்து வருவதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.பட்டா மாறுதல், பெயர் திருத்தம் உள்ளிட்டவைகளுக்கு அதிகாரிகள் கையூட்டு பெறுவது தடை செய்யப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. ஒன்றிய செயலாளர் பாலம்மாள், தாலுகா செயலாளர் முருகேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ