உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சென்னை ரயில்களில் இருக்கையுடன் கூடுதல்  பெட்டி இணைக்க வேண்டும்

சென்னை ரயில்களில் இருக்கையுடன் கூடுதல்  பெட்டி இணைக்க வேண்டும்

ராமநாதபுரம் : -ராமேஸ்வரத்தில் இருந்து சென்னைக்கு இரு ரயில்கள் தினசரி இயக்கப்படுகின்றன. இதில் இருக்கைகள் கொண்ட பெட்டி இணைக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தினர்.ராமேஸ்வரத்தில் இருந்து சேது எக்ஸ்பிரஸ், போர்ட் மெயில் ஆகிய இரு ரயில்கள் சென்னைக்கு இயக்கப்படுகின்றன. இந்த இரு ரயில்களிலும் அதிக பயணிகள் பயணிக்கின்றனர். முன்பதிவு முடிந்த பிறகும் முன் பதிவில்லா பெட்டிகளில் தினமும் ஏராளமானோர் சென்னை செல்கின்றனர்.இட நெருக்கடியால் சென்னை செல்லும் பயணிகள் தவிக்கும் நிலை ஏற்படுகிறது. மற்ற ரயில்களில் உள்ளது போல் சென்னை செல்லும் ரயில்களில் பயணிகள் அமரும் இருக்கை கொண்ட பெட்டியை இணைத்தால் கூடுதல் பயணிகள் சென்னைக்கு பயணிக்க முடியும்.தற்போது பயணிகள் கூட்டம் அதிகரிப்பால் தனியார் ஆம்னி பஸ்களில் அதிக பணம் செலவிட்டு பயணிக்கும் நிலை உள்ளது. ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்து சென்னை செல்லும் ரயில்களில் அமரும் இருக்கைகள் கொண்ட கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும்.ராமநாதபுரம் வழக்கறிஞர்கள் சங்க துணைத்தலைவர் மாதவன் கூறுகையில்: ராமநாதபுரத்தில் இருந்து சென்னைக்கு பயணிக்கும் பயணிகள் அதிகரித்து வருகின்றனர். இவர்கள் ரயில் பயணத்திற்கு முயற்சிக்கும் போது போதுமான அளவு இட வசதி இருப்பதில்லை. குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில்களில் பயணிகள் அமரும் இருக்கைகள் கொண்ட ரயில் பெட்டி இணைக்கப்பட்டுள்ளது. அதே போல் ராமநாதபுரம் வழியாக இயக்கப்படும் சேது, போட் மெயில் ரயில்களில் இணைக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ