உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஆக.3ல் பெருமாள் கோயிலில் அன்னக்கூடை உற்ஸவம் ஆக.3ல் நடக்கிறது

ஆக.3ல் பெருமாள் கோயிலில் அன்னக்கூடை உற்ஸவம் ஆக.3ல் நடக்கிறது

திருப்புல்லாணி; திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில் ஆக.,3 மாலை 4:00 மணிக்கு அன்னக்கூடை உற்ஸவம் நடக்கிறது. பொதுவாக பெருமாள் மற்றும் விஷ்ணு கோயில்களில் நடக்கும் உற்ஸவங்களில் அன்னக்கூடை உற்ஸவம் சிறப்பு வாய்ந்தது. இதை அன்ன பாவாடை உற்ஸவம் என்றும் சொல்வதுண்டு. புராணத்தில் கோவர்த்தன மலையை ஒரு விரலால் துாக்கிப் பிடித்த கண்ணபிரானுக்கு நன்றி செலுத்தும் விதமாக இவ்விழா கொண்டாடப் படுகிறது. இந்த உற்ஸவத்தை முன்னிட்டு பல்வேறு வகையான இனிப்பு, கார வகைகள், பட்சண வகைகள் மற்றும் விதவிதமான சாதங்கள் ஆகியவற்றை உற்ஸவர் பெரு மாளுக்கு முன்பாக அதிகளவு நெய்வேத்தியமாக வைக்கப்படுகின்றன. அதிக பொருட்செலவில் செய்யப்படும் இது போன்ற பிரசாதங்களை பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஆக., 3 மாலை 4:00 மணிக்கு பெருமாள் கோயிலில் வழங்க உள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆசிரமத்தில் ஜீயர் ஸ்ரீ வராக மகா தேசிகன் சுவாமி தலைமையில் நடக்க உள்ளது. ஆண்டவன் ஆசிரம சீடர்கள் மற்றும் மேலாளர் ரகுவீர தயாள் ஆகியோர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை