மேலும் செய்திகள்
மண்டல தடகளப் போட்டிகள்
10-Mar-2025
கீழக்கரை: கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லுாரியில் 45 வது ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா நடந்தது. அறக்கட்டளை தலைவர் முகம்மது யூசுப் தலைமை வகித்தார்.செயலாளர் ஷர்மிளா, செயல் இயக்குனர் ஹமீது இப்ராகிம், இயக்குனர் ஹபீப் முஹம்மது முன்னிலை வகித்தனர். முதல்வர் சேக் தாவூது வரவேற்றார்.உடற்கல்வி இயக்குனர் மருதாச்சல மூர்த்தி ஆண்டறிக்கை வாசித்தார். சென்னை லுாகாஸ் டி.வி.எஸ்., லிமிடெட் பொது மேலாளர் உதய குமார், சி.எஸ்.ஆர்., ஆலோசகர் கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.வாரிய தேர்வுகளில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் அதிக மதிப்பெண் வாங்கிய மாணவர்களுக்கும், விளையாட்டு போட்டியில் வென்றவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழும் வழங்கப்பட்டது.பன்னாட்டு நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற்ற 447 மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் பங்கேற்று பணி நியமன ஆணைகளை பெற்றுக் கொண்டனர்.ஏற்பாடுகளை வேலை வாய்ப்பு அலுவலர் கணேஷ் குமார் செய்திருந்தார். மின்னியல் துறை தலைவர் பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.
10-Mar-2025