பள்ளிகளில் கலைத்திருவிழா போட்டி
திருவாடானை: திருவாடானை தாலுகாவில் உள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் கலைத் திருவிழா போட்டிகள் நடந்தது.அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு கலைத் திருவிழா போட்டிகள் நடத்தப்படுகின்றன. ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அனைத்து மாணவர்களுக்கும் கலைத் திருவிழா போட்டிகள் நடக்கிறது. இதில் மாறுவேடம், பாடல், நடனம், ஓவியம், கதை கூறுதல், பேச்சு போட்டி உட்பட பல்வேறு போட்டிகளில் பல ஆயிரம் மாணவர்கள் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.நேற்று திருவாடானை தாலுகாவில் உள்ள 10 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் நடந்தது. ஒன்று முதல் இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஐந்து வகையான போட்டிகளும், மூன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு எட்டு வகையான போட்டிகளும் நடந்தது.இப்போட்டியில் 1110 பேர் கலந்து கொண்டனர். நடுவர்களாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் இருந்தனர். போட்டிகளில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பிடித்த மாணவர்கள் மட்டும் தேர்வு செய்யப்பட்டு வட்டார அளவிலான போட்டிகளுக்கு பரிந்துரை செய்யப்படுவார்கள்.போட்டி ஏற்பாடுகளை திருவாடானை வட்டார கல்வி அலுவலர் புல்லாணி, ஒன்றிய மேற்பார்வையாளர் கார்த்திக் செய்திருந்தனர்.