உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மழைநீர் தேங்கியுள்ள வயல்களில் நெற்பயிரை காப்பாற்றுவது எப்படி; வேளாண் உதவி இயக்குனர் விளக்கம்

மழைநீர் தேங்கியுள்ள வயல்களில் நெற்பயிரை காப்பாற்றுவது எப்படி; வேளாண் உதவி இயக்குனர் விளக்கம்

திருப்புல்லாணி : திருப்புல்லாணி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கன மழையால் சம்பா உள்ளிட்ட நெல் ரகங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல் வயல்களில் வடிகால் வசதியின்றி நிலங்களிலும் தண்ணீர் தேங்கி பாதிப்பு ஏற்படுகிறது.விவசாயிகள் தண்ணீரில் உள்ள நெற்பயிர்களை பாதுகாக்க முடியும் என திருப்புல்லாணி வேளாண் உதவி இயக்குனர் செல்வம் தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது: முதலில் மழை நீர் தேங்கியுள்ள பகுதியில் வடிகால் வசதியை அதிகப்படுத்தி நெற்பயிர் மூழ்காதவாறு தண்ணீரை வெளியேற்ற வேண்டும். மழைநீர் வடியும் போது நீருடன் மண்ணில் உள்ள தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து, போரான், சுண்ணாம்பு மற்றும் மாங்கனீசு சத்துக்களின் கரைதிறன் அதிகமாகி தண்ணீரோடு கரைந்து வெளியேறிவிடும்.இதனால் நெற்பயிற்களுக்கு வேண்டிய ஊட்டச்சத்து பயிர்களுக்கு சரிவர கிடைக்காமல் போய்விடும். மேகமூட்டமான சீதோஷ்ண நிலை காரணமாக பூச்சி மற்றும் நோய்களின் தாக்குதல் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. மழை நீரில் மூழ்கிய நெற்பயிருக்கான உர மேலாண்மை முறைகள், மழை வெள்ளத்தால் பாதிப்படைந்த பயிர்கள் இளம் மஞ்சள் நிறத்தில் காணப்படும். பயிர்களுக்கு ஏக்கருக்கு 2 கிலோவுடன் ஒரு கிலோ சிங்சல்பேட்டை 200 லி., தண்ணீர் கலந்து காலை அல்லது மாலை வேளைகளில் இலைவழி உரமாக தெளிக்க வேண்டும். மேலும் ஒரு கிலோ சூடோமோஸ் மருந்தை 200 லி., தண்ணீரில் கலந்து 10 நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை தெளித்தல் வேண்டும். நீரை வடிகட்டியுடன் மகசூல் இழப்பிலிருந்து பயிர்களை காப்பாற்ற ஏக்கருக்கு 4 கிலோ டி.ஏ.பி., உரத்தை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து ஓர் இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் காலையில் நீருடன் 2 கிலோ யூரியா மற்றும் ஒரு கிலோ பொட்டாஷ் உரத்தை சேர்த்து 190 லி., தண்ணீரில் கலந்து காலை, மாலை வேளைகளில் தெளிக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி