உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / அரிசி கடத்தலை தடுத்த அதிகாரிகளை கொல்ல முயற்சி

அரிசி கடத்தலை தடுத்த அதிகாரிகளை கொல்ல முயற்சி

ராமநாதபுரம்: அரிசி கடத்தலை தடுத்த அதிகாரிகளை கொல்ல முயன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரத்தில் பறக்கும் படை தாசில்தார் தமீம், வருவாய் ஆய்வாளர் முத்துராமலிங்கம் ஆகியோருக்கு ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்தப்படுவதாக புகார் சென்றது. செட்டியத்தெருவில் சென்ற மினி சரக்கு லாரியை அவர்கள் நிறுத்த முயன்றனர். அப்போது, அந்த வாகனம் நிற்காமல் அதிகாரிகள் மீது மோதுவது போல் சென்றது. இதில், கீழே விழுந்த ஆர்.ஐ., முத்துராமலிங்கம் காயமடைந்தார். பின், அதிகாரிகள் டூ - வீலரில் மினி சரக்கு லாரியை விரட்டி சென்றனர். சின்னக்கடை தெருவில் வாகனத்தை நிறுத்திவிட்டு, இருவர் தப்பி ஓடினர். வாகனத்தில் இருந்த 15 வயது சிறுவனை அதிகாரிகள் மடக்கி பிடித்தனர். மேலும், வாகனத்தில் 40 மூட்டைகளில், 2.5 டன் ரேஷன் அரிசி கடத்தப்பட்டது தெரியவந்தது. வாகனத்தையும், அரிசியையும் பறிமுதல் செய்தனர். சிறுவனை உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினரிடம் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ