உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  காப்புரிமை குறித்து விழிப்புணர்வு

 காப்புரிமை குறித்து விழிப்புணர்வு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லுாரியில் காப்புரிமை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. சென்னை அண்ணா பல்கலை ஆராய்ச்சித் துறை இயக்குநர் கந்தபாபு தலைமை வகித்தார்.கல்லுாரி முதல்வர் பெரியசாமி முன்னிலை வகித்தார். பேராசிரியை சித்திசமீம் பாத்திமா வரவேற்றார். இயக்குநர் கந்தபாபு பேசியதாவது: காப்புரிமை என்பது ஒரு தனி நபரோ அல்லது ஒரு நிறுவனத்தாலோ கண்டு பிடிக்கப்படும் புதிய ஆராய்ச்சிகளுக்கு அரசால் வழங்கப்படும் சட்ட ரீதியான பாதுகாப்பு. இதன் மூலம் கண்டுபிடிப்பாளர்களை ஊக்கப்படுத்தியும், அவரது உழைப்பை யாராலும் தட்டிப்பறிக்க முடியாது. இது 20 ஆண்டுகள் செல்லுபடியாகும். புதிய இயந்திரம், மருத்துவப் பொருட்கள், மென்பொருட்கள் சார்ந்த கண்டு பிடிப்புகளுக்கே காப்புரிமை வழங்கப்படுகிறது என்றார். பேராசிரியர்கள், பணியாளர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். பேராசிரியர் நாகநாதன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி