உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  ஹாட் ஸ்பாட் பகுதியில்   அலைபேசி குழுக்கள் அமைத்து விழிப்புணர்வு  

 ஹாட் ஸ்பாட் பகுதியில்   அலைபேசி குழுக்கள் அமைத்து விழிப்புணர்வு  

ராமநாதபுரம் :-ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிக குழந்தை திருமணங்கள் நடந்த 'ஹாட்ஸ்பாட்' இடங்கள் அடையாளம் காணப்பட்டு அங்கு அலைபேசி குழுக்கள் ஏற்படுத்தி விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு செய்யப்படுகின்றன.மாவட்டத்தில் 2021 முதல் 2024ம் ஆண்டு வரை 361 குழந்தை திருமணங்கள் குறித்த தகவல் பெறப்பட்டு 287 திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. 74 திருமணங்கள் நடந்து முடிந்துள்ளது. இதில் 39 திருமணங்கள் போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. மேலும் 50 திருமணங்கள் குறித்து சி.எஸ்.ஆர்., பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் நான்கு ஆண்டுகளில் 429 ஊராட்சிகளில் 311 ஊராட்சிகளில் குழந்தை திருமணங்கள் ஏதும் பதிவாகவில்லை. அதே நேரம் 92 ஊராட்சிகளில் 2 க்கும் குறைவான குழந்தை திருமணங்கள் பதிவாகியுள்ளது. 2 அல்லது அதற்கும் மேற்பட்ட திருமணங்கள் 26 ஊராட்சிகள், 4 பேரூராட்சிகள், 4 நகராட்சிகளில் 361 திருமணங்களில் 185 திருமணங்கள் நடந்துள்ளது. இவை 'ஹாட் ஸ்பாட்' பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த பகுதிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், கண்காணிப்பு மேற்கொள்ளவும் மாவட்ட குழந்தகைள் நலப்பாதுகாப்பு அலகு சார்பில் அலைபேசியில் குழுக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதில் அப்பகுதி குழந்தைகள் நலக்குழு உறுப்பினர், ஊராட்சித்தலைவர், அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள், போலீசார் உள்ளனர். இவர்கள் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு குழந்தை திருமணங்கள் நடக்காமல் தடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சிவக்குமார் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை