உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / விழிப்புணர்வு ஊர்வலம்

விழிப்புணர்வு ஊர்வலம்

முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே வெங்கலக்குறிச்சி அரசு உயர்நிலைப்பள்ளியில் போதை பொருள் ஒழிப்பு மற்றும் போக்சோ விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. தலைமையாசிரியர் மலைச்சாமி தலைமை வகித்தார். முன்னாள் ஊராட்சி தலைவர் செந்தில்குமார் ஊர்வலத்தை துவக்கி வைத்தார். வெங்கலக்குறிச்சி கிராமத்தில் உள்ள முக்கிய தெருக்களில் மாணவர்கள் போதை பொருள் ஒழிப்பு குறித்த பதாகைகள் ஏந்தி மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். போக்சோ சட்டம், குழந்தை திருமண தடுப்பு, போதை பொருள் ஒழிப்பு குறித்து ஆசிரியர்கள் விளக்கம் அளித்தனர். உடன் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை