உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஆயுத பூஜை வாகன ஊர்வலம்

ஆயுத பூஜை வாகன ஊர்வலம்

ஆர்.எஸ்.மங்கலம்: ஆயுத பூஜையை முன்னிட்டு ஆர்.எஸ். மங்கலம் டவுன் பகுதியில் ஆட்டோ, கார் உள்ளிட்ட வாடகை வாகனங்களின் ஊர்வலம் நடைபெற்றது.ஆயுத பூஜையை முன்னிட்டு ஆட்டோ, கார், மினி சரக்கு வாகனங்களின் ஊர்வலம் நடந்து. முன்னதாக வாகனங்களை சுத்தம் செய்த உரிமையாளர்கள் பூஜை செய்து வழிபாடு செய்தனர். ஆர்.எஸ். மங்கலம் சி.ஐ.டி.யு., ஆட்டோ ஓட்டுநர்கள் தொழிற்சங்கம் சார்பில் நடந்த விழாவிற்கு பேரூராட்சி தலைவர் மவுசூரியா தலைமை வகித்தார். போலீஸ் எஸ்.ஐ., முகமது சைபுல், பேரூராட்சி துணைத்தலைவர் ராசு முன்னிலை வகித்தனர். ஆட்டோ ஓட்டுநர்கள் பூஜை செய்து வழிபாடு செய்தனர். தொடர்ந்து பஸ் ஸ்டாண்டில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக பல்வேறு சங்கங்களை சேர்ந்த ஆட்டோக்கள், வாடகை கார்கள் மற்றும் மினி சரக்கு வாகனங்களின் ஊர்வலம் நடைபெற்றது. சி.ஐ.டி.யு., ஆட்டோ சங்க தலைவர் பிரபாகரன், உதவி தலைவர் அபுதாஹிர், செயலாளர் பிரபு, பொருளாளர் ஜேம்ஸ் உட்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி