மேலும் செய்திகள்
கலியநேந்தல் கிராமத்தை காலி செய்யும் மக்கள்
18-Nov-2025
முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே கூவர்கூட்டம் கிராமத்தில் 80க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். விவசாயம், கால்நடை வளர்ப்பு பிரதான தொழிலாக உள்ளது. பல ஆண்டுகளாக ரேஷன் கடை வசதி இல்லாததால் ரேஷன் கார்டுதாரர்கள் 3 கி.மீ., பொதிகுளம் கிராமத்திற்கு சென்று அரிசி உட்பட அத்தியாவசிய பொருட்கள் வாங்கி வருகின்றனர். இந்நிலையில் ஜூலை 24ல் அத்தியாவசிய பொருட்கள் வாங்கி விட்டு டிராக்டரில் ஊர் திரும்பிய போது பொதிகுளம் அருகே டிராக்டர் கவிழ்ந்து மூன்று பேர் இறந்தனர். பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். நிவாரணம் வழங்குவதற்காக கூவர்கூட்டம் கிராமத்திற்கு நேரில் வந்த கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் கிராம மக்கள் ஒன்று கூடி கிராமத்தில் குடிநீர், ரோடு, மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் மக்கள் ஊரை விட்டு வெளியேறி வருகின்றனர். மக்களின் நலன் கருதி தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் கூறினர். கலெக்டர், அமைச்சரிடம் நேரில் கோரிக்கை விடுத்தும் கடந்த ஐந்து மாதங்களாக எந்த அடிப்படை வசதிகளும் செய்யப்படாமல் இருப்பதால் மக்கள் சிரமப்படுகின்றனர். மக்கள் கூறுகையில், கூவர்கூட்டம் கிராமத்தில் அடிப்படை வசதிகளின்றி மக்கள் சிரமப்பட்டு வரும் நிலை பல ஆண்டுகளாக தொடர்கிறது. தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக அதிகாரிகள் ஆய்வு செய்து ஒரு நாள் மட்டும் சரி செய்தனர். மீண்டும் அதே நிலை தொடர்கிறது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே நிரந்தர நடவடிக்கை எடுக்கவில்லை எனில் மக்களை திரட்டி கலெக்டர் அலுவலகத்தில் ரேஷன் கார்டு, ஆதார் அட்டை ஒப்படைக்கும் போராட்டம் நடத்தப்படும் என்றனர்.
18-Nov-2025