உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / வெளிநாடுகளில் பணிபுரிவோர் குறைகளை  தெரிவிக்க உதவி எண் வெளியிட திட்டம் பா.ஜ., அயலக தமிழர் பிரிவு மாநில தலைவர் சுந்தரம் பேட்டி

வெளிநாடுகளில் பணிபுரிவோர் குறைகளை  தெரிவிக்க உதவி எண் வெளியிட திட்டம் பா.ஜ., அயலக தமிழர் பிரிவு மாநில தலைவர் சுந்தரம் பேட்டி

ராமநாதபுரம்: வெளிநாடுகளில் பணிபுரிவோர் குறைகளை தெரிவிக்க உதவி எண் வெளியிட திட்டமிட்டுள்ள தாக பா.ஜ., அயலக தமிழர் பிரிவு மாநில தலைவர் சுந்தரம் தெரிவித்தார். ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ., தலைமை அலு வலகத்தில் அயலகத் தமிழர் பிரிவு மாவட்ட நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டத்திற்கு தலைமை வகித்த சுந்தரம் பின்னர் கூறியதாவது: சாயல்குடி அருகே உள்ள மணிவளை கிராமத்தை சேர்ந்த மாரிமுத்து துபாயில் பணிபுரிந்த போது அக்.,18 ல் மாரடைப்பால் இறந்தார். அவரது உடலை மீட்டு உறவினர்களிடம் ஒப்படைத்தோம். கடந்த இரு மாதங்களில் 5 உடல்களை மீட்டு உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளோம். ராமநாதபுரத்தில் இருந்து அதிகமானோர் வெளிநாடு களில் பணிபுரிகின்றனர். தவறான ஏஜன்சி மூலம் சென்று வெளிநாடுகளில் சிக்கியுள்ளோரை மீட்கவும், இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க வும் முயற்சி செய்து வரு கிறோம். வெளி நாடுகளில் பணிபுரிவோருக்கான காப்பீடு திட்டங்கள், பணி பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். அதே போல் வெளிநாடு களுக்கு கல்வி கற்க செல்ல விரும்புவோருக்கு அதற்கான நடைமுறை குறித்து விளக்கப்படும். அந்த திட்டங்களை செயல்படுத்த மாவட்ட நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டோரை எளிதாக அணுக உதவி எண் வெளியிட திட்டமிட்டுள்ளோம். இதன் மூலம் வெளிநாடுகளில் பணிக்காக செல்வோர், பாதிக்கப்பட்டோர் அணுகலாம். உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் இருந்து இழப்பீடு பெற்று கொடுக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம் என்றார். பா.ஜ., அயலக தமிழர் பிரிவு மாநில செயலாளர் அன்பழகன், ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ., தலைவர் முரளிதரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ