வாசகர்கள் கருத்துகள் ( 1 )
சொல்லிட்டு போய் குடிக்க சொல்றங்களா இதுக்குத்தான் போட்டோ ஓட்டுறாங்களா பிஜேபி நிர்வாகிகள்
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் டாஸ்மாக் கடை முன்பு முதல்வர் ஸ்டாலின் படத்தை ஒட்டிய பா.ஜ., மாநில மகளிர் அணி துணைத் தலைவர் கலாராணியிடம் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.டாஸ்மாக் ஊழல் விவகாரத்தில் முதல் குற்றவாளி முதல்வர் ஸ்டாலின் தான். டாஸ்மாக் கடைகளில் முதல்வர் படத்தை ஒட்டுவோம் என்றும் பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார். ராமநாதபுரம் புறநகர் பகுதியான காட்டூரணி, கிழக்கு கடற்கரை சாலை டாஸ்மாக் கடை முன் தமிழக முதல்வர் ஸ்டாலின் படத்தை பா.ஜ., மாநில மகளிர் அணி துணைத் தலைவர் கலா ராணி ஒட்டினார்.நாளை மாவட்டம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் ஒட்டப்படும் என பா.ஜ., மகளிரணியினர் தெரிவித்தனர்.இதையறிந்த கேணிக்கரை போலீசார் உடனடியாக படத்தை அகற்றினர். இது தொடர்பாக கலா ராணியிடம் விசாரணை நடத்தப்படும் என தெரிவித்தனர்.
சொல்லிட்டு போய் குடிக்க சொல்றங்களா இதுக்குத்தான் போட்டோ ஓட்டுறாங்களா பிஜேபி நிர்வாகிகள்