உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பா.ஜ., வினர் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் 

பா.ஜ., வினர் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் 

ராமநாதபுரம் : தி.மு.க., அரசையும், டாஸ்மாக் ஊழலை மூடி மறைக்கும் செயலை கண்டித்து கருப்பு கொடியுடன் ராமநாதபுரம் பா.ஜ., அலுவலகம் முன்பு அக்கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.நகர் தலைவர் நாகராஜன் தலைமை வகித்தார். நகராட்சி கவுன்சிலர் குமார் முன்னிலை வகித்தார். வழக்கறிஞர் சண்முகநாதன், முத்துச்சாமி, ஊடகப் பிரிவு தலைவர் குமரன் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர். தி.மு.க., அரசை கண்டித்தும், ஆயிரம் கோடி டாஸ்மாக் ஊழலை மூடி மறைக்க முயற்சிப்பதை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். இதே போல் பா.ஜ., மாவட்டத்தலைவர் முரளிதரன், முன்னாள் மாவட்டத்தலைவர் தரணி முருகேசன் உட்பட பா.ஜ., நிர்வாகிகள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை