மேலும் செய்திகள்
தண்டவாளம் பராமரிப்பு பணி
03-Sep-2024
ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் அருகே பாம்பன் புதிய ரயில் பாலத்தில் தண்டவாளத்தின் உறுதித் தன்மை குறித்து நவீன பரிசோதனை கருவியை பயன்படுத்தி பொறியாளர்கள் ஆய்வு செய்தனர்.பாம்பன் கடலில் ரூ.550 கோடியில் அமைத்த புதிய ரயில் பாலம் கட்டுமானப் பணி முடிவடைந்த நிலையில் தற்போது துாக்கு பாலத்தை பொருத்தும் பணி முழுவீச்சில் நடக்கிறது. இப்பணி முடிந்ததும் அக்., இறுதியில் புதிய ரயில் பாலம் திறக்கப்பட உள்ளது. 2.1 கி.மீ., புதிய பாலத்தில் உள்ள தண்டவாளம் உறுதித் தன்மை மற்றும் தண்டவாளத்திற்குள் மெல்லிய விரிசல் ஏதும் உள்ளதா என்பதை லேசர் ஒளி வீசும் கருவி மூலம் ரயில்வே பொறியாளர்கள் பாம்பன் பாலம் கிழக்கு கடற்கரை- மண்டபம் கடற்கரை பூங்கா வரை ஆய்வு செய்தனர்.இந்த ஆய்வில் தண்டவாளம் உறுதியாக உள்ளதாகவும், ஆய்வறிக்கையை ரயில்வே அமைச்சகத்துக்கு அனுப்ப உள்ளதாகவும் தெரிவித்தனர்.
03-Sep-2024