உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கார் மோதி சாலையோரம் நின்ற சிறுவன், சிறுமி பலி

கார் மோதி சாலையோரம் நின்ற சிறுவன், சிறுமி பலி

சாயல்குடி : ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சொர்ணராஜன். இவரது மகள் சண்முகப்பிரியா 13. 8ம் வகுப்பு படித்தார். அவரது உறவினரான குகன் என்பவரின் மகன் ஹரி சூர்யா பிரகாஷ் 14. அரசு மேல்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு படித்தார். இருவரும் பத்ரகாளி அம்மன் கோயிலில் விழாவில் கலந்துகொண்டு விட்டு மீண்டும் வீட்டிற்கு செல்ல கிழக்கு கடற்கரை சாலையில் ஓரமாக நின்றிருந்தனர். அதிகாலை 12:00 மணிக்கு ராமநாதபுரத்திலிருந்து துாத்துக்குடி நோக்கி சென்ற கார் கட்டுபாட்டை இழந்து சண்முகப்பிரியா, ஹரி சூரிய பிரகாஷ் ஆகியோர் மீது மோதியது. சம்பவ இடத்திலேயே சண்முகப்பிரியா உயிரிழந்தார். ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு ஹரி சூரிய பிரகாஷ் உயிரிழந்தார். கர்நாடக மாநிலம் மாண்டியா பகுதியைச் சேர்ந்த கார் டிரைவர் சிவா 45, என்பவரை சாயல்குடி போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

naranam
ஏப் 16, 2025 00:28

அடப்பாவி! எல்லாம் டாஸ்மாக் பண்ற கொடுமை.


அப்பாவி
ஏப் 15, 2025 07:37

கதி சக்தி... தேடி வந்து மோதி இடிப்போம்.. சாகடிப்போம். கண்டவனுக்கும் காரு வாங்க கடன் குடுப்போம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை