மேலும் செய்திகள்
போக்சோவில் 17 வயது சிறுவன் கைது
28-Mar-2025
ராமநாதபுரம்,:ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ரயில் நிலையத்தில் மீட்கப்பட்ட 17 வயது பீகார் மாநில சிறுவனை ஒராண்டுக்கு பின் பெற்றோரிடம் ஒப்படைக்க உள்ளனர். பரமக்குடி ரயில் நிலையத்தில் திரிந்த 17 வயது சிறுவனை சைல்டு லைன் பணியாளர்கள் 2024 ஏப்., 16 ல் மீட்டு காரைக்குடி அரசு குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் சேர்த்தனர். அவரது முகவரியை அறிந்து பெற்றோரிடம் ஒப்படைக்க கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் சிவக்குமாருக்கு உத்தரவிட்டார். சிறுவன் மன வளர்ச்சி இல்லாமல், வாய் பேச முடியாத நிலையில் இருந்ததால் அவரது முகவரியை பெற முடியவில்லை. ஆதார் பதிவு மூலம் சிறுவன் முகவரியை கண்டறிய நடவடிக்கை எடுத்தனர். தனிப்பட்ட நபர்களின் விபரங்களை நீதிமன்ற உத்தரவு இல்லாமல் வழங்க முடியாது என்பதால் சிவக்குமார் ராமநாதபுரம் சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் சார்பு நீதிபதி பிரசாத்திடம் மனு செய்தார். பிரசாத் மதுரை சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலம் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சிவக்குமார் பெயரில் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தாக்கல் செய்தனர். நீதிமன்றம் ஆதார் பதிவு மையமான இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தை சிறுவனின் முகவரியை குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் சிவக்குமாரிடம் வழங்க உத்தரவிட்டது. அதன்பின் முகவரி பெறப்பட்டு சிறுவனை பீகாரில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலமாக பெற்றோரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
28-Mar-2025