மேலும் செய்திகள்
இலவச மருத்துவ முகாம்
1 minutes ago
சாலையோர வியாபாரிகள் காத்திருப்பு போராட்டம்
1 minutes ago
ராமேஸ்வரத்தில் ரூ.2.09 கோடி உண்டியல் காணிக்கை
4 minutes ago
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலத்தில் இருந்து செங்குடி, பூலாங்குடி வழியாக இளையான்குடி செல்லும் ரோட்டில் முறையான மாற்று பாதையின்றி பாலம் அமைக்கும் பணியால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதி அடைகின்றனர். ஆர்.எஸ். மங்கலத்தில் இருந்து பெரிய கண்மாய் பாலம், செங்குடி, பூலாங்குடி, சாத்தனுார், சாலைகிராமம் வழியாக இளையான்குடி செல்வதற்கு ரோடு வசதி உள்ளது. இந்த ரோட்டின் மூலம் 30 க்கும் மேற்பட்ட கிராமத்தினர் பயனடைகின்றனர். இந்நிலையில் செங்குடி விலக்கு முதல் பூலாங்குடி வரை ரோடு விரிவாக்க பணி நடைபெற உள்ளது. இதனால் இந்த ரோட்டின் குறுக்கே நான்கு இடங்களில் மழைநீர் செல்வதற்கான பாலம் அமைக்கும் பணி துவங்கி உள்ளது. இந்த பணிகளுக்காக ரோடு துண்டிக்கப்பட்ட நிலையில் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் சிரமமின்றி சென்று வரும் வகையில் முறையான மாற்றுப் பாதை ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை. இதனால் மாற்றுப் பாதை சேறும் சகதியும் ஆக மாறி வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். சம்பந்தப்பட்ட கான்ட்ராக்டர் முறையான மாற்றுப்பாதையை ஏற்படுத்திக் கொடுக்காததால் அவ்வழியாக சென்று வந்த பஸ்களும் இந்த வழித்தடத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பத்துக்கும் மேற்பட்ட கிராமத்தினர் பஸ் வசதியின்றி பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், முறையான மாற்று பாதை அமைத்து பணிகள் மேற்கொள்ளப்படுவதை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.
1 minutes ago
1 minutes ago
4 minutes ago