கிடப்பில் பாலம் கட்டும் பணி
திருவாடானை: திருவாடானை ஆலம்பாடி, பிள்ளையாரேந்தல் ரோட்டில் சிறுபாலம் கட்டும் பணி சில மாதங்களுக்கு முன்பு துவங்கியது. பாலம் கட்ட தோண்டப்பட்ட நிலையில் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. பாலம் கட்டப்பட்ட இடத்தில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் அந்த வழியாக வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் தவிக்கின்றனர். மாணவர்களும் சிரமம் அடைந்துள்ளனர். பாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.