மேலும் செய்திகள்
3 ஊராட்சிகளில் கம்யூட்டர் திருட்டு
7 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்,
7 hour(s) ago
கமுதியில் நாய் கூட்டம் அச்சத்தில் பொதுமக்கள்
7 hour(s) ago
10 நாட்களுக்கு பின் இன்று மீன்பிடிப்பு
7 hour(s) ago
குறைவான பஸ்கள் இயக்கம்பரமக்குடி: பரமக்குடியில் இருந்து மதுரை மார்க்கத்தில் செல்லும் பஸ்கள் குறைவாக இயக்கப்பட்டதால் ஏராளமான பயணிகள் பரமக்குடி பஸ்ஸ்டாண்டில் அவதிப்பட்டனர்.பரமக்குடி நகராட்சியில் 1 லட்சத்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். சுற்றுவட்டார கிராமங்களிலிருந்து தினமும் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வந்து செல்கின்றனர். மதுரை, ராமேஸ்வரம் செல்வதற்கு பிரதான இடமாக பரமக்குடி பஸ் ஸ்டாண்ட் விளங்குகிறது. இங்கிருந்து 20க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படும் நிலையில் ராமேஸ்வரம், ராமநாதபுரம், முதுகுளத்துார் என தினமும் 10 முதல் 20 நிமிடத்திற்கு ஒரு முறை பரமக்குடி வழியாக மதுரைக்கு பஸ்கள் செல்கின்றன. நேற்று விடுமுறை நாளாக இருந்த நிலையில் முகூர்த்த நாள் என்பதால் மக்கள் சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்க செல்லும் நிலை ஏற்பட்டது. ஆனால் பஸ்கள் குறைந்த அளவில் இயக்கப்பட்டதால் பயணிகள் நாள் முழுவதும் தங்கள் உடமைகள் மற்றும் குழந்தைகளுடன் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். மேலும் சில பஸ்கள் தி.மு.க., இளைஞரணி மாநாட்டிற்கு திருப்பி விடப்பட்டுள்ளதாகவும் ஊழியர்கள் தெரிவித்தனர். விசேஷ நாட்களில் சிறப்பு பேருந்துகள் என்ற பெயரில் பயணிகளை அலைக்கழிப்பது வாடிக்கையாகி விட்டது என குற்றம் சாட்டினர்.
7 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago