உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தொண்டி காரங்காடு சுற்றுலா மையம் மேம்படுத்தபடுமா: போதிய வசதியின்றி மக்கள் பாதிப்பு

தொண்டி காரங்காடு சுற்றுலா மையம் மேம்படுத்தபடுமா: போதிய வசதியின்றி மக்கள் பாதிப்பு

திருவாடானை: தொண்டியில் உள்ள காரங்காடு கடலில் மாங்குரோவ் காடுகள் சுற்றுலா மையத்தில் குடிநீர்வசதி, ரோடுவசதி ஆகியவை இன்றி மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இவ்விடத்தை மேம்படுத்தினால் வெளியூர் சுற்றுலா பயணிகள் வருகை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.ராமநாதபுரத்திலிருந்து தொண்டி செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் மணக்குடி அருகே உள்ளது காரங்காடு கிராமம். இங்கு 75 எக்டரில் கண்ணுக்கு எட்டும் துாரம் வரையில் கடற்கரை ஓரத்தில் மாங்குரோவ் காடுகள் அடர்ந்து வளர்ந்துள்ளன. கடலுக்குள் 3 கி.மீ. துாரம் படகில் சென்றால் அதன் அழகை கண்டு ரசிக்கலாம். 2017 ல் சுற்றுலா தளமாக அரசு அறிவித்தது. இங்கு படகு சவாரி, கயாக்கிங் எனபடும் துடுப்பு படகு சவாரி வனத்துறையினரால் ஏற்பாடு செய்யபட்டுள்ளது. இங்கு மேலும் வசதிகள் செய்யப்படும் பட்சத்தில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கலாம்.இதுகுறித்து காரங்காடு மக்கள் கூறியதாவது: அரசு விடுமுறை நாட்களில் வெளி மாவட்டங்களிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் அதிகமாக வருகின்றனர். இங்கு சிறுவர் பூங்கா அமைக்க வேண்டும். கடற்கரையிலிருந்து முகத்துவாரத்திற்கு செல்லும் ரோட்டை சீரமைக்க வேண்டும். குடிநீர் வசதியில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் பெரிதும் சிரமம் அடைந்துள்ளனர். உணவகம் வசதியில்லை. காலையில் வரும் சுற்றுலா பயணிகள் மாலை வரை இருப்பதால் சாப்பாடு கிடைக்காமல் தவிக்கின்றனர். ஆகவே உணவகம் அமைக்கவேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை