உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  கார்- -- வேன் மோதல் பக்தர்கள் 2 பேர் பலி 

 கார்- -- வேன் மோதல் பக்தர்கள் 2 பேர் பலி 

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே, சபரிமலை பக்தர்கள் சென்ற காரும், வேனும் நேருக்கு நேர் மோதியதில், அய்யப்ப பக்தர்கள் இருவர் உயிரிழந்தனர். ஹரியானா மாநிலத்தை சேர்ந்த ஒன்பது பேர், ராமேஸ்வரத்திற்கு சுற்றுலா வந்தனர். நேற்று அதிகாலை வேனில் சென்னைக்கு திரும்பினர். மதுரை- - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் உச்சிப்புளி அடுத்த நாகாச்சி அருகே, காலை 7:00 மணிக்கு வேன் சென்றது. அப்போது, ஆந்திர மாநிலத்தில் இருந்து ராமேஸ்வரத்திற்கு ஆறு அய்யப்ப பக்தர்கள் சென்ற கார் மீது வேன் நேருக்கு நேர் மோதியது. இதில், காரின் முன்பகுதி முழுதும் நொறுங்கியது. காரில் வந்த அய்யப்ப பக்தர்கள் பைடி சாய், 23, நவீன், 22, ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காரில் சிக்கியிருந்த நான்கு பேர், வேனில் இருந்த ஐவர் என ஒன்பது பேரை தீயணைப்பு துறையினர் மீட்டு, ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பினர். உச்சிப்புளி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்