உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தண்ணீர் மோட்டார் திருடிய 4 பேர் மீது வழக்கு

தண்ணீர் மோட்டார் திருடிய 4 பேர் மீது வழக்கு

ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அருகே வரவணியை சேர்ந்த சகாயமாதா 46, விவசாயி. இவரது நிலத்தில் சிறிய ரக தண்ணீர் மோட்டாரை (ஆயில் பம்பு செட்) பயன்படுத்தி தண்ணீர் பாய்ச்சி வந்தார்.ஜன.6 இரவு மோட்டார் திருடு போனது. சகாயமாதா போலீசில் புகார் செய்தார். மோட்டாரை கைப்பற்றிய போலீசார் சகாயமாதாவிடம் ஒப்படைக்காததால் பயிர்கள் சாவி ஆகிவிட்டதாகவும், தனது விவசாய நிலத்தை ஆர்.எஸ்.மங்கலம் போலீஸ் ஸ்டேஷனுக்கு எழுதி வைப்பதாக கூறி கலெக்டரிடம் சகாயமாதா புகார் தெரிவித்ததார்.மோட்டாரை பதுக்கி யதாக கொட்டுப்புளி கிராமம் தீபா 29, மணிமாறன் 48, பார்த்திபன் 33, பாண்டி 48, ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ