கண்மாய் கரை சேதம் 2 பேர் மீது வழக்கு
திருவாடானை: திருவாடானை அருகே குணபதிமங்கலம் கண்மாய் கரையை சிலர் இயந்திரம் மூலம் சேதப்படுத்தினர். அங்கிருந்து டிராக்டர்கள் மூலம் மண்ணை எடுத்து அருகிலிருந்த பண்ணைகுட்டையை சீரமைத்தனர். இது குறித்து சில நாட்களுக்கு முன்பு குணபதிமங்கலம் கிராம மக்கள் திருவாடானை தாசில்தார், கலெக்டரை நேரில் சந்தித்து மனு கொடுத்தனர். இதனை தொடர்ந்து செக்காந்திடல் குரூப் வி.ஏ.ஓ., பெருமாள் புகாரில் கீழஅரும்பூர் அன்பழகன் 55, குணபதிமங்கலம் தங்கவேலு 65, ஆகியோரை தொண்டி போலீசார் தேடிவருகின்றனர்.