உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள்  வேலை நிறுத்தம் செய்து ஆர்ப்பாட்டம் 

மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள்  வேலை நிறுத்தம் செய்து ஆர்ப்பாட்டம் 

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம் செய்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.ராமநாதபுரத்தில் மத்திய கூட்டுறவு வங்கி முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க தலைவர் முருகன் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். வங்கி ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். அனைத்து மத்திய, நகர கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கும்20 சதவீதம் ஊதிய உயர்வு வழங்க வேண்டும். கேரள மாநிலம் போல் தமிழகத்தில் உள்ள 23 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவுவங்கி ஆகியவற்றை இணைத்து தமிழ்நாடு வங்கி உருவாக்க வேண்டும். உதவி மேலாளர் பதவி உயர்வில் 3 க்கு 1 என்பதை ரத்து செய்ய வேண்டும். வணிக வங்கிகளில் உள்ளது போல் மருத்துவ காப்பீடு திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். நிர்வாகி ஜான்சன் டேவிட் நன்றி கூறினார்.-------


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை