உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஆர்.எஸ்.மங்கலத்தில் சாரல் மழை

ஆர்.எஸ்.மங்கலத்தில் சாரல் மழை

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று மாலை சாரல் மழை பெய்தது. சில வாரங்களாக பருவமழையின்றி வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், நேற்று பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இருப்பினும், நெல் வயல்களில் தண்ணீர் தேங்கும் அளவிற்கு மழை பெய்யாததால், நெல் வயல்களுக்கு உரம் இடுவதில் விவசாயிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்யும் பட்சத்தில், உரம் இடும் பணியை தீவிர படுத்த உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ