மேலும் செய்திகள்
மிளகாய் நடவு செய்வதில் விவசாயிகள் ஆர்வம்
04-Dec-2024
மிளகாய் நாற்றுகளை நடவு
08-Dec-2024
ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நெல்லுக்கு அடுத்தபடியாக மிளகாய் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. புல்லமடை, வல்லமடை, ராமநாதமடை, சவேரியார் பட்டினம், செங்குடி, எட்டியத்திடல், முத்துப்பட்டினம், சேத்திடல், சீனாங்குடி பகுதிகளில் அதிகளவில் மிளகாய் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.கனமழையால் மிளகாய் வயல்களில் தண்ணீர் தேங்கி கன்றுகள் பாதிப்படைந்தன. இதனால் பாதிப்படைந்த விவசாயிகள், பாதிக்கப்பட்ட மிளகாய் வயல்களில் தயார் நிலையில் வைத்திருந்த மிளகாய் நாற்றுகளை நடவு செய்தனர். வங்கக் கடலில் உருவாகிய புயல் சின்னத்தால் கடலோரப் பகுதிகளில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்ததை தொடர்ந்து மிளகாய் விவசாயிகள் கலக்கம் அடைந்தனர்.இந்நிலையில், வட மாவட்டங்களில் புயல் கடந்து சென்றதால் ராமநாதபுரம் மாவட்டத்தில் மிளகாய் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் நிம்மதி அடைந்தனர்.
04-Dec-2024
08-Dec-2024