சித்ரா பவுர்ணமி வழிபாடு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் கோதண்டராமர் கோயிலில் உற்ஸவர் கள்ளழகர் அலங்காரத்தில் குதிரை வாகனத்தில் எழுந்தருளினார்.இதுபோல் அழகன்குளம் சந்தான கோபாலகிருஷ்ண சுவாமி கோயிலில் உற்ஸவர் குதிரை வாகனத்தில் அழகர் அலங்காரத்தில் வைகை ஆற்றங்கரையில் எழுந்தருளினார். ராமநாதபுரம் அருகே வழுதுார் அளம் கிராமத்தில் கோவிந்த சுவாமி கோயில் சார்பில், மேளதாளத்துடன் தேரில் அழகர் வைகை ஆற்றில் இறங்கி மண்டுக மகரிஷிக்கு மோட்சம் கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.