உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சோலியக்குடி ஜெட்டி பாலத்தில் செல்ல தடை

சோலியக்குடி ஜெட்டி பாலத்தில் செல்ல தடை

தொண்டி : தொண்டி அருகே சேதமடைந்த ஜெட்டி பாலத்தில் செல்வதற்கு தடை விதித்து தடுப்பு அமைக்கப்பட்டது. தொண்டி அருகே சோலியக்குடியில் 100 க்கும் மேற்பட்ட விசைபடகு மீனவர்கள் தங்கி மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இங்கு 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ஜெட்டி பாலம் உள்ளது. அந்த பாலத்தை மீன்களை இறக்கி வைக்கவும், படகுகளை கட்டி வைக்கவும் மீனவர்கள் பயன்படுத்தினர். இந்த பாலம் சேதமடைந்து விட்டதால் மீனவர்கள் விசைப்படகுகளை நிறுத்தி வைக்க முடியாமல் சிரமப்பட்டனர். இது குறித்து தொண்டி வக்கீல் கலந்தர் ஆசிக், உயர்நீதி மன்றம் மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில் பாலம் இடியும் நிலையில் உள்ளது. நடந்து செல்பவர்கள் ஓட்டை வழியாக விழுந்து காயமடைகின்றனர். ஆகவே பாலத்தில் மக்கள் செல்ல தடை விதித்து பாலத்தை சீரமைக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். அதனை தொடர்ந்து பாலம் முன்பு தடுப்பு அமைக்கப்பட்டு பாலம் சேதமடைந்துள்ளதால் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மீனவர்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறினால் போலீஸ் நடவடிக்கை எடுக்கப்படும் என மீன்வளத்துறை சார்பில் எச்சரிக்கை போர்டு வைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை