மேலும் செய்திகள்
3 ஊராட்சிகளில் கம்யூட்டர் திருட்டு
13 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்,
13 hour(s) ago
கமுதியில் நாய் கூட்டம் அச்சத்தில் பொதுமக்கள்
13 hour(s) ago
ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்த பறவைகள் கணக்கெடுப்பில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு வட அமெரிக்க கிளிஞ்சல் கொத்தி பறவைகள் வலசை வந்துள்ளதாக பறவை ஆர்வலர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.இம்மாவட்டத்தில் ஜன.28, 29ல் பறவைகள் கணக்கெடுப்பு நடந்தது. இதில் பறவைகள் ஆர்வலர்கள், தன்னார்வலர்கள் மற்றும் வனத்துறையினர் ஈடுபட்டனர். ராமநாதபுரம் அருகே தேர்தங்கல், மேல செல்வனுார், கீழசெல்வனுார், சித்திரங்குடி, காஞ்சிரங்குளம், பறவைகள் சரணாலயங்கள், மன்னார் வளைகுடா தீவுகள், தனுஷ்கோடி, வாலிநோக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கணக்கெடுப்பு நடந்தது.இதில் மனோலி தீவுப்பகுதியில் கிளிஞ்சல் கொத்தி என்ற பறவை 35 ஆண்டுகளுக்குப் பிறகு இம்மாவட்டத்திற்கு வலசை வந்துள்ளது கண்டறியப்பட்டது. இதையடுத்து பறவைகள் ஆர்வலர்கள் மகிழ்ச்சியடைந்தனர். மேலும் இந்த ஆண்டு அதிக பறவைகள் வலசை வந்துள்ளன.பறவைகள் ஆர்வலர் ரவீந்திரன் கூறியதாவது: இம்மாவட்டத்திலுள்ள மனோலி தீவில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு கிளிஞ்சல் கொத்தி என்ற பறவை வலசை வந்தது கண்டறியப்பட்டுள்ளது என்றார். இப்பறவை கிளிஞ்சல்களை உண்பதால் இதன் பெயர் கிளிஞ்சல் கொத்தி என்றழைக்கப்படுகிறது.1731ல் மார்க்கேட்ஸ்பே என்பவரால் இவை ஒரு வட அமெரிக்க பறவையினம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. 1843ல் வில்லியம்யாரல் என்பவரால் இதன் பழைய பெயரான ஸூபை என்ற பெயருக்கு மாற்றாக கிளிஞ்சல்கள் பிடிப்பான் என மாற்றப்பட்டது.ஆப்பிரிக்கா மற்றும் தென் கிழக்கு ஆசிய வெப்பமண்டல பகுதிகளில் இவை காணப்படும் என்றார்.
13 hour(s) ago
13 hour(s) ago
13 hour(s) ago