உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தீர்த்தாண்டதானத்தில் கடற்கரை ரோடு சேதம்

தீர்த்தாண்டதானத்தில் கடற்கரை ரோடு சேதம்

தொண்டி: தீர்த்தாண்டதானம் கடற்கரைக்கு செல்லும் ரோடு சேதமடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.தொண்டி அருகே தீர்த்தாண்டதானத்தில் சகலதீர்த்தமுடையவர் கோயில் உள்ளது. அமாவாசை நாட்களில் பொதுமக்கள் அங்குள்ள கடலில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து சுவாமி தரிசனம் செய்வார்கள்.இங்கு கிழக்கு கடற்கரை சாலையிலிருந்து தீர்த்தாண்டதானம் கடற்கரை ரோடு மிகவும் சேதமடைந்துள்ளது. வாகனங்கள் செல்ல முடியாத வகையில் பாதிப்பு அதிகமாக உள்ளது. இது குறித்து தீர்த்தாண்டதானம் வள்ளிநாயகம் கூறியதாவது:கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அமாவசை நாட்களில் பல ஆயிரம் பக்தர்கள் கூடுவார்கள். வெளி மாவட்டங்களை சேர்ந்வர்கள் வாகனங்களில் வருவார்கள். ரோடு சேதமடைந்துள்ளதால் சிரமப்படுகின்றனர். கடற்கரைக்கு செல்லும் ரோட்டை சீரமைக்க அதிகாரிகளுக்கு பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை