பருவ மழையின் தாக்கத்தால் தேங்காய் விலை சற்று குறைவு
ரெகுநாதபுரம்: ரெகுநாதபுரம், பெரியபட்டினம், முத்துப்பேட்டை, வாலாந்தரவை உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் ஏராளமான தென்னை மரங்கள் உள்ளன. 20 நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் தேங்காய் விலை சற்று குறைந்துள்ளது.தேங்காய் வியாபாரி ஜெகநாதன் கூறியதாவது:ஆண்டிற்கு ஆறு முறை தென்னை மரத்தில் இருந்து தேங்காய்கள் பறிக்கப்படுகின்றன. தேங்காய் மட்டை உரிப்பதற்கு கூலியாக ரூ. 1 வழங்கப்படுகிறது. கடந்த கோடை காலத்தில் ஒரு கிலோ தேங்காய் ரூ. 50 முதல் 60 வரை விற்பனை செய்யப்பட்டது.தற்போது மழையின் தாக்கத்தால் சற்று குறைந்து ரூ.45 வரை தேங்காய் தரம் வாரியாக பிரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.இங்கு விளைவிக்கப்படும் தேங்காய் பெரும்பாலும் ராமநாதபுரம், பரமக்குடி, ராமேஸ்வரம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் விற்பனைக்காக வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர்.தற்போது பெய்யும் மழையின் தாக்கத்தால் வரக்கூடிய கோடை காலத்தில் கிடைக்கக்கூடிய தேங்காய்கள் பருமனாகவும் திரட்சியாகவும் உற்பத்தியாகும். எண்ணெய் வித்திற்காக தேங்காய் கொப்பரைகள் ஈரோடு, காங்கேயம் உள்ளிட்ட பகுதிகளுக்கு மொத்தமாக வெளியூர் வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர் என்றார்.