உள்ளூர் செய்திகள்

கலெக்டர் பாராட்டு

ராமநாதபுரம்; -சென்னையில் உள்ள இந்திய அலுவலர்கள் சங்கம் சார்பில் மதுரை மண்டல சிறப்பு கூட்டம், மனமகிழ் பட்டிமன்றம் மற்றும் பரத நாட்டியம் நிகழ்ச்சி சங்கத் தலைவர் சம்பத் தலைமையில் மதுரை உலக தமிழ்ச்சங்க கூட்ட அரங்கில் நடந்தது.இதில் கலை இளமணி விருது பெற்ற ராமநாதபுரம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி லேகாஸ்ரீ வரவேற்பு நடனம் ஆடினார். இதனை பாராட்டி சங்க தலைவர் சம்பத் மாணவி லேகாஸ்ரீக்கு விருது வழங்கினார். விருது பெற்ற லேகாஸ்ரீ ராமநாதபுரம் கலெக்டர் விஷ்ணு சந்திரனிடம் பாராட்டு பெற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ