உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பருவமழை முன்னெச்சரிக்கை குறித்து கலெக்டர் ஆய்வு

பருவமழை முன்னெச்சரிக்கை குறித்து கலெக்டர் ஆய்வு

கமுதி : கமுதியில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் ஆய்வு செய்தார்.கமுதி நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் வளாகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் நேரில் ஆய்வு செய்தார். அப்போது வளாகத்தில் உள்ள முன்னெச்சரிக்கை குறித்து பயன்படுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ள மணல் மூடைகள், மரம் அறுவை இயந்திரங்கள் உட்பட உபகரணங்கள் செயல்பாடு குறித்து ஆய்வு செய்தார்.அப்போது வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேவையான கருவிகள், அத்தியாவசிய பொருட்கள் உட்பட உபகரணங்கள் அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். உடன் பரமக்குடி சப்-கலெக்டர் அபிலாஷா கவுர், நெடுஞ்சாலைத்துறை மண்டல பொறியாளர் முருகன், கமுதி உட்கோட்ட பொறியாளர் சக்திவேல் உட்பட அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ