உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கல்லுாரி பேராசிரியர்கள் தொடர் போராட்டம்

கல்லுாரி பேராசிரியர்கள் தொடர் போராட்டம்

பரமக்குடி : பரமக்குடி அரசு பெண்கள் கலை கல்லுாரி பேராசிரியர்கள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி 3வது முறையாக தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அழகப்பா பல்கலையால் 2012ல் துவக்கப்பட்ட பரமக்குடி அழகப்பா பல்கலை உறுப்பு கல்லுாரியில் 2015ம் ஆண்டு 14 நிரந்தர பேராசிரியர்கள் பணியமர்த்தப்பட்டனர். தொடர்ந்து அரசு கல்லுாரியாக மாற்றப்பட்ட சூழலில், மீண்டும் அழகப்பா பல்கலைக்கு பணி மாறுதல் செய்ய உத்தரவு வந்தது. ஆனால் மாறுதல் செய்யப்படாத சூழலில் இவர்களுக்கான பண பலன்கள் மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆக.13, ஆக.14 ஆகிய நாட்களில் நடந்த போராட்டத்தில், முதல்வர் வனஜா மற்றும் தாசில்தார் வரதன் உள்ளிட்டோர் அடுத்தடுத்த நாட்களில் நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில் கலைந்து சென்றனர். மேலும் தீர்வு காணப்படும் என கூறிய சூழலில் நேற்றும் எந்த முன்னேற்றமும் ஏற்படாத காரணத்தால், மீண்டும் 3வது முறையாக பேராசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை