உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கம்ப்யூட்டரில் தட்டச்சு தேர்வு நடத்தும் முடிவை அரசு ரத்து செய்ய வேண்டும் வணிகவியல் பள்ளிகள் கோரிக்கை

கம்ப்யூட்டரில் தட்டச்சு தேர்வு நடத்தும் முடிவை அரசு ரத்து செய்ய வேண்டும் வணிகவியல் பள்ளிகள் கோரிக்கை

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட வணிகவியல் பள்ளிகள் சங்கம் சார்பில் 2027 முதல் கம்ப்யூட்டரில் தட்டச்சு தேர்வு நடத்தும் தொழிற்கல்வி இயக்ககத்தின் உத்தரவை அரசு திரும்ப வேண்டும். தட்டச்சு மெஷின் மூலம் தேர்வுகளை நடத்த வேண்டும் என வலியுறுத்தினர்.ராமநாதபுரம் மாவட்ட வணிகவியல் பள்ளிகள் சங்கத்தின் சார்பில் மாவட்டத் தலைவர் முருகபூபதி, செயலாளர் சரவணபவ, பொருளாளர் குஞ்சரமூர்த்தி உள்ளிட்ட பரமக்குடி, ராமநாதபுரத்தில் உள்ள வணிகவியல் பள்ளிகளின் உரிமையாளர்கள் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோனிடம் மனு அளித்தனர். இதில், தமிழகத்தில் 5000 தட்டச்சு பள்ளிகள் அரசு அங்கீகாரத்துடன் செயல்படுகிறது. தேர்வுகள் தட்டச்சு இயந்திரம் மூலம் நடக்கிறது. இந்நிலையில் 2025-26 ஆண்டுகளில் நடைபெறும் தேர்வுகள் தட்டச்சு இயந்திரத்தில் நடைபெறும். அதன் பிறகு 2027 முதல் கம்ப்யூட்டர் மூலம் மட்டுமே தட்டச்சு தேர்வு நடத்தப்படும் என தொழிற்கல்வி இயக்ககம் சுற்றிறிக்கை அனுப்பியுள்ளது.இந்த முடிவால் தட்டச்சு பொறி மெக்கானிக்குகள், அவர்களுடன் பல ஆயிரம் குடும்ப உறுப்பினர்கள், பயிற்சியாளர்கள் பலர் பாதிக்கப்படுவார்கள். மேலும் மாணவர்களுக்கும் சிரமம் ஏற்படும். எனவே புதிய உத்தரவை ரத்து செய்து, பழைய முறைப்படி தட்டச்சு இயந்திரங்கள் மூலம் மட்டுமே தொழில்நுட்ப கல்வி இயக்ககம் தேர்வு நடத்த வேண்டும் என வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை